சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்ச்சையில் இழுபறி; மறுபரிசீலனை முடிவு ஒத்திவைப்பு

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 08:50 pm


உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நீதிபதி கே.எம்.ஜோசப்பை மறுபரிசீலனை செய்ய இன்று அழைக்கப்பட்ட கொலீஜியம் எந்த முடிவையும் எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

 உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம், வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரகாண்ட் ஹைகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை பரிந்துரை செய்தது. ஆனால்,  மத்திய அரசு, அதில் இந்து மல்ஹோத்ராவின் பரிந்துரையை ஏற்பதாகவும், கே.எம்.ஜோசப்பின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. 

மத்திய அரசு நீதிபதிகளின் நியமனத்துக்குள் நுழைந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், கொலீஜியத்தின் தலைவரான தலைமை நீதிபதி, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்தார். 

இந்நிலையில், இன்று, தலைமை நீதிபதி உட்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடியது. இதில், தலைமை நீதிபதி விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள் செலமேஷ்வர், கோகோய் ஆகியோரும் அடங்குவர். 

ஆனால்,  இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல், மறுபரிசீலனை முடிவை ஒத்திவைப்பதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது. மேலும், கொல்கத்தா, ஆந்திரா, தெலங்கானா,  ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் பரிசீலனை செய்யும் முடிவையும் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close