தீபக் மிஸ்ரா தகுதி நீக்க வழக்கு: காங்கிரஸின் மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 11:45 am


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மூத்த நீதிபதிகள் 4 பேர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல்வேறு முறைகேடு புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகள் இணைந்து தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.


காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இதற்கான மனுவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அளித்தார். இந்த மனு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த வெங்கையா நாயுடு, கடந்த 27ம் தேதி மனுவை நிராகரித்தாக  அறிவித்தார். 

வெங்கையா நாயுடுவின் இந்த நிராகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.பிக்கள் இரண்டு பேர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். நீதிபதி செல்லமேஸ்வரர் அடங்கிய அமர்வுக்கு அளிக்கப்பட்ட மனுவில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க வெங்கையா நாயுடுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி செல்லமேஸ்வர் தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்தார். 

தலைமை நீதிபதி தொடர்பான வழக்கு என்பதால் இதனை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று நியமிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய வழக்கு, அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போதே காங்கிரஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close