கேரளாவில் விநோத வழக்கு: குழந்தைக்கு தானே பெயர் சூட்டிய கேரள நீதிபதி; பெற்றோர்கள் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 11:10 am


கேரளாவில்  கணவன் – மனைவி விவாகரத்து நிலுவையில் இருந்த காரணத்தால் அவர்களது குழந்தைக்கு நீதிபதியே பெயர் சூட்டிய விநோத வழக்கு நடந்துள்ளது.  

நீதிமன்றங்களில் பரபரப்பான வழக்குகளுக்கு மத்தியில் சில வினோதமான வழக்குகள் வரும். அதுபோன்று ஒரு வழக்கு தான் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வந்துள்ளது. கேரளாவில் ஒரு தம்பதியர் விவகாரத்து வேண்டி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. தம்பதியரில் அந்த பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். ஆண் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் ஒரு பிரச்னை உருவானது. அதாவது, குழந்தைக்கு  ‘ஜோகன் மணி சச்சின்’ என தாயும்,  ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரை வைக்க வேண்டும் என தந்தையும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. இருவரும் தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். பின்னர் நீதிபதி, உங்களுக்குள் ஏன் இந்த சண்டை? நானே இந்த குழந்தைக்கு பெயர் வைக்கிறேன் என்று கூறி அந்த குழந்தைக்கு 'ஜோகன் சச்சின்’ என்ற பெயரை வைத்தார்.  தாயார் பரிந்துரைத்த பேரில் இருந்து 'ஜோகன்' என்ற பெயரையும், தந்தையார் பரிந்துரைத்ததில் இருந்து 'சச்சின்' என்ற பெயரை எடுத்து இருவரும் பொதுவாக வைக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

அங்கிருந்தவர்கள் இதை ஆமோதிக்கும் வகையில் கைதட்டி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் நீதிபதி பெயர் சூட்டியதை பெற்றோர்கள் இருவரும் அதிர்ச்சியில் பார்க்க வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். வேறு வழியில்லாமல் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு திரும்பினர்.  தற்போது குழந்தை தாயின் பராமரிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close