காவிரி வரைவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 01:57 pm


காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் வரைவுத் திட்டத்தினை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. 

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. முந்தைய விசாரணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி காவிரி வரைவுத்திட்டத்தினை தாக்கல் செய்தார். ஒரு சீலிட்ட கவரில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

0 காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0  தலைவர் உள்பட 10 பேர் கொண்ட குழுவாக இந்த அமைப்பு இருக்கும். இதில் நீர்வளத்துறை செயலரும் இடம்பெறுவார்.

0 10 பேரில் இரண்டு பேர் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவர். ஒருவர் பகுதி நேர உறுப்பினர்.

0 ஒருவர் நீர்வளத்துறை, ஒருவர் வேளாண் துறை அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பர்.

0 ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவர் உறுப்பினராக இருப்பார். 

0 காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார்.

0 காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறினாலும் அதனை செயல்படுத்த மத்திய அரசு தயார். அது வாரியமா? ஆணையமா? குழுவா ?என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யலாம் என்பன போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 கர்நாடகா, தமிழகம்,கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசிற்கு  அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தினை தாக்கல் செய்த பிறகு, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களும் பதில்தர உத்தரவிட்டு வழக்கு மே 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close