திருத்தப்பட்ட காவிரி வரைவுத் திட்டம் தாக்கல்; நாளை இறுதித் தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 02:03 pm


உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட காவிரி வரைவுத்திட்டத்தினை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கடந்த மே 14ம் தேதி மத்திய அரசு காவிரி வரைவுத் திட்டத்தினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி, மே 16ம் தேதி நடந்த விசாரணையில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, அந்த வரைவுத்திட்டத்தில் மூன்று அம்சங்களை திருத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. 

திருத்தப்பட்ட 3 அம்சங்கள் பின்வருமாறு: 

1. காவிரி வரைவுத் திட்டத்தில் குழுவிற்கு 'காவிரி மேலாண்மை வாரியம்' என்ற பெயரை வைக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டது. ஆனால் திருத்தப்பட்ட வரைவில் 'காவிரி மேலாண்மை ஆணையம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. வாரியத்தை விட ஆணையத்திற்கே அதிக அதிகாரம் என மத்திய அரசு தரப்பில் பெயர் மாற்றியதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டது. 

2. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் 'பெங்களுரு' என்பதற்கு பதிலாக 'டெல்லி' என மாற்றப்பட்டுள்ளது. இதுவும் தமிழக அரசின் கோரிக்கை தான். 

3. காவிரி வரைவுத்திட்டத்தில் முதலில் மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப,  'காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை, வாரியத்தின் முடிவே இறுதியானது' என நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. அதன்படி மத்திய அரசின் அதிகாரங்கள் திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை மாலை 4 மணிக்கு இறுதித்தீர்ப்பு வழங்க உள்ளது. அவ்வாறு வழங்கமுடியாத பட்சத்தில் மே 22 அல்லது 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய காவிரி வழக்கு விசாரணையின் முழுவிபரம்: 

http://www.newstm.in/India/1526456698467?Cauvery-Water-Dispute-Case--There-is-no-rights-to-Central-Govt--says-SC

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close