கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 04:41 pm


பல்வேறு நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது. இதில் கார்த்தி சிதம்பரம் அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து சிபிஐ காவல் விசாரணை நடைபெற்றது. இறுதியாக  நீதிமன்றக்காவலில் இருந்த அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதேபோன்று ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தியை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இன்று அந்த மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "நாளை(மே.19) முதல் மே 27ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம். அந்த சமயத்தில் வெளிநாட்டில் வங்கி கணக்கு தொடங்கவோ, ஏற்கனவே உள்ள கணக்கை முடிக்கவோ கூடாது. வெளிநாட்டில் எந்தவித சொத்து பரிவர்த்தனையும் செய்யக்கூடாது" என உத்தரவிட்டனர். 

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, கார்த்தி சிதம்பரம் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close