"ஜனநாயகத்தை நிலைநிறுத்தியவர் நீதிபதி செல்லமேஸ்வர்"

Last Modified : 18 May, 2018 10:44 pm


உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியான ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர், இன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அவர் ஜனநாயகத்திற்கு தோள் கொடுத்தவர் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாராட்டினார்கள். 

உச்ச நீதிமன்ற வழக்கப்படி, ஓய்வுபெறும் நீதிபதிகள், கடைசி நாளன்று தலைமை நீதிபதியுடன் சேர்ந்து வழக்குகளை விசாரிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்சில், நீதிபதி செல்லமேஸ்வர் அமர்ந்தார். கடைசி 15 நிமிடங்கள் வழக்குகளை மூவரும் விசாரித்தனர். 

விசாரணை முடிந்து நீதிபதி செல்லமேஸ்வர் புறப்பட தயாரானபோது, வழக்கறிஞர் ராஜீவ் தத்தா, ஜனநாயகத்திற்கு செல்லமேஸ்வர் தோள் கொடுத்ததாக புகழ்ந்தார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பேசுகையில், "செல்லமேஸ்வர் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் மிக சிறப்பாக செயல்பட்டார்" என்று பாராட்டினார். மேலும் பல வழக்கறிஞர்கள், நீதிபதி செல்லமேஸ்வரை புகழ்ந்து பேசினர். அனைவருக்கும் நன்றி கூறிய பிரியாவிடை பெற்றார் செல்லமேஸ்வர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close