ஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 11:18 am

p-chidambaram-gets-interim-protection-from-arrest-in-inx-media-case

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கைத் தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்திற்கு இன்று முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய முன்னாள்  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்(மே.29) மனு அளித்தார். அந்த மனு மீதான விசாரணையில், ஜுன் 5ம்  தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் நேற்று இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் 5ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம்  ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இதேபோன்று ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கிலும் ப.சிதம்பரம், முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். தொடர்ந்து சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மே 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ஆஜராக வேண்டும் என கூறியிருந்தது. இதனால் விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்ற நோக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதன்படி, ஜூலை 3ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close