ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்!

  Padmapriya   | Last Modified : 05 Jun, 2018 10:27 am

p-chidambaram-appears-on-summoned-by-cbi-in-aircel-maxis-case

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் இன்று ஆஜராகிறார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் மேக்சிஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி முன்னதாக ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு இப்போது புதிய சம்மனை விடுத்துள்ளது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது. அவர் ஒருமுறை ஆஜராகும் பட்சத்தில் அமலாக்கப்பிரிவு பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ், அமலாக்கப்பிரிவு வாக்குமூலத்தை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கைதை தவிர்க்க கடந்த வாரம் சிதம்பரம், ஜாமீன் பெற்றார். இதனையடுத்து நீதிமன்றம் சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை அல்லது கைது நடவடிக்கையை வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் எடுக்கக்கூடாது என்று அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்டது. 

தொடர்புடையவை:

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்!

கார்த்தி சிதம்பரம் கைது! - பின்னணி என்ன?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close