தற்கொலைக்கு தூண்டிய வழக்கை சசி தரூர் சந்திக்க வேண்டும்: நீதிமன்றம்

  shriram   | Last Modified : 05 Jun, 2018 06:13 pm
tharoor-should-face-trial-in-sunanda-case-delhi-court

முன்னாள் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை சசி தரூர் சந்திக்க வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 வருடங்களுக்கு முன், டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், அப்போதைய அமைச்சர் தரூரின் மனைவி சுனந்தா இறந்து கிடந்தார். மன அழுத்தத்தை குறைக்க அதிக மாத்திரைகளை உட்கொண்டதன் விளைவாக அவர் இறந்ததாக தெரிய வந்தது. தற்கொலை முன்னர், சசி தரூருக்கு நெருக்கமான ஒரு பாகிஸ்தான் நாட்டு பெண் பத்திரிக்கையாளருக்கும், சுனந்தாவுக்கும் இடையே சமூக வலைதளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவில், கடந்த மாதம், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆதாரமில்லாமல் டெல்லி போலீசார் தன் மீது குற்றம் சாட்டுவதாகவும், இதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாகவும் தரூர் கூறியிருந்தார். இந்நிலையில், இதை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை சசி தரூர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜூலை 7ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரூர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் கையில் நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் இதுகுறித்து முழுவதும் பேசுவதாக தெரிவித்துள்ளார். ஆனால்,  தரூருக்கு எதிராக அரசு தரப்பு எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close