லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 12:54 pm
sc-asks-centre-to-inform-in-10-days-time-frame-for-appointing-lokpal

லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊழல், லஞ்சம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் பொருட்டு லோக்பால் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  கடந்த 2017 ஏப்ரல் 27 அன்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து, வழக்கின் விசாரணையில், "நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், "மத்திய அரசு விரைந்து லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், லோக்பால் அமைப்பதற்கான காலக்கெடு குறித்து 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close