நிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 02:45 pm
nirbhaya-gang-rape-case-sc-confirms-death-sentence-for-convicts

நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2017 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது. 6 பேரில் ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் 3 வருடங்கள் மட்டும் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானார். இதையடுத்து தூக்குத் தண்டனை பெற்ற 5 பேரில் ஒருவர் சிறையிலே தற்கொலை செய்து கொண்டார். அதுதவிர முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை உறுதிசெய்யபட்டது. 

தூக்குத்தண்டனையை எதிர்த்து முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி, நீதிபதிகள் கூறுகையில், "முதலில் இந்த வழக்கில் குற்றவாளிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது.  குற்றவாளிகள் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே குற்றாவளிகள் நால்வருக்கும் தூக்குத்தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது" என தெரிவித்து அவர்களின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்திற்கு இன்று வருகை தந்த நிர்பயாவின் தாயார், "உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை நிராகரித்து சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close