ஓரினச் சேர்க்கை தடையை நீக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 05:36 am
supreme-court-justices-bats-for-homosexuals

ஓரினச் சேர்க்கை மீது உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய சட்டம் 377வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு, டெல்லி உயர் நீதிமன்றம், ஓரினச் சேர்க்கை.மீதான தடையை நீக்கியது. ஆனால், அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், 2013ம் ஆண்டு, ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்சில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், ஓரினச் சேர்க்கை மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என குறிப்பிட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ஓரினச் சேர்க்கையால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதாக கூறப்படும் நிலையில், அதை சமூகம் ஏற்றுக் கொண்டால், நோய்கள் குறையும் என்றார். "ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் இருந்து ஒளிந்து வாழ்ந்தால், நோய்கள் பரவுவது அதிகரிக்கும்," என்றார். ஒடுக்குவதன் மூலம் இந்த விஷயத்தில் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்.

ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வேண்டும் என வாதிட்ட வழக்கறிஞரிடம், நீதிபதி இந்து மல்ஹோத்ரா, "ஆன் - பெண் பாலியல் உறவில் எய்ட்ஸ் பரவுவது இல்லையா?" என கேள்வி எழுப்பினார். நீதிபதி நரிமன் இதுகுறித்து பேசியபோது, "இதுபோன்ற சமூக பிரச்னைகளை, ஒடுக்குதல் மூலம் சரி செய்துவிட முடியாது. எல்லா வகை ஒடுக்குதலுமே தவறு தான்" என்றார்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வாதங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமைப்புகளுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close