பிரதமர், ஜனாதிபதி யாராக இருந்தாலும் காரில் நம்பர் பிளேட் அவசியம் - டெல்லி உயர்நீதிமன்றம் 

  சுஜாதா   | Last Modified : 19 Jul, 2018 09:14 am
number-plates-must-for-vvip-vehicles-delhi-high-court

பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் சட்டப்படி நம்பர் பிளேட் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

டெல்லி உயர்நீதி மன்றத்தின் நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பொது நல வழக்கின் விசாரணையை மேற்கொண்டது. அப்போது பேசிய நீதிபதிகள் 'மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்' என கூறினர். மேலும்,  உயர்பதவிகளில் இருப்பவர்களான  பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் சட்டப்படி நம்பர் பிளேட் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நியாய பூமி என்பவர் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் கார்களில் நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக அரசு சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close