சில்லரையாக ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம்: முன்னாள் கணவன் தந்த விநோத டார்ச்சர்!

  Padmapriya   | Last Modified : 26 Jul, 2018 02:39 pm
man-gives-wife-alimony-of-rs-24-600-in-coins

சண்டிகரில் தனது முன்னாள் மனைவிக்கு தர வேண்டிய ரூ.25 ஆயிரம் ஜீவனாம்ச தொகையை, சில்லரையாக கொண்டு வந்து நீதிமன்றத்தில் கொடுத்தது அங்கு பரபரப்பு ஏற்பதுத்தியது. 

பஞ்சாப் மாநிலம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்டு கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடுத்தார். அதன் பின்னர் விவாகரத்தை அடுத்து ஜீவனாம்ச வழக்கில், மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் செலவுக்குத் தர வேண்டும் என்று பஞ்சாப் மாநில கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. 

இருப்பினும் அவர் மனைவிக்கு கடந்த 2 மாதங்களாக அவர் ஜீவனாம்சம் தரவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவரது முன்னாள் மனைவி மனு தாக்கல் செய்தார். அப்போது 2 மாத தொகை ரூ.50 ஆயிரத்தை தரவேண்டும் என்றும் இனிமேல் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் பராமரிப்பு தொகையைத் தர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரஜ்னிஸ்க் கே சர்மா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மனைவிக்குத் தர வேண்டிய ரூ.25 ஆயிரத்தை 2 பெரிய பைகளில் அந்த வழக்கறிஞர் கொண்டு வந்திருந்தார். பைகளைப் பிரித்து பார்த்த போது, அவற்றில் ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் இருந்தன. அதைப் பார்த்து நீதிபதியும், மற்றவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

இதனைக் கண்டு எரிச்சலடைந்த முன்னாள் மனைவி, ''என்னை சித்ரவதை செய்வதற்கு இது ஒரு புது வழி. மேலும், நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் நோக்கம் இது. இந்த வழக்கில் பல வாய்தாக்களுக்குப் பிறகு முதல்முறையாக பணத்தை தருகிறார். இப்போது அந்தப் பணத்தையும் சில்லரையாகத் தருகிறார். இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது. இவ்வளவு சில்லறையை எப்படி என்னால் மாற்ற முடியும்'' என்றார். 

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ''ஜீவனாம்ச தொகை மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி ரூ.100, ரூ.500 அல்லது ரூ.2000 என்ற நோட்டுகளில் தான் தரவேண்டும் என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. இந்த சில்லரைகளை எண்ணுவதற்கு, 3 ஜூனியர்களை உதவிக்கு அழைத்து வந்துள்ளேன்''  என்று கூறினார்.

தொடர்ந்து  பைகளில் இருந்த சில்லரைகளை எண்ணிய போது அதில் ரூ.24,600 இருந்தது. 400 ரூபாய குறைந்தது. அந்த பாக்கிப் பணத்தை ரூ.100 நோட்டுகளாக வழக்கறிஞர் வழங்கினார். இந்த வியப்பான வழக்கால் நீதிமனறத்தில் பரபரப்பு நிலவியது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close