இந்து - முஸ்லீம் திருமணத்தை பிரித்த போலீசார்: நீதிமன்றம் கடும் சாடல்

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 07:25 pm
delhi-high-court-question-police-actions-separating-a-hindu-muslim-couple

டெல்லியில் முஸ்லீம் பெண்ணை மணந்த இந்து இளைஞரை, மனைவியிடம் இருந்து பிரித்து, கைது செய்து 3 நாட்கள் காவலில் வைத்த அம்மாநில போலீசாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் விடுத்துள்ளது. 

டெல்லி அருகேயுள்ள, உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை, டெல்லியை சேர்ந்த நபர் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த மாத இறுதியில், காசியபாத்தில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர், டெல்லி ஜெ.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் வசித்து வந்த அந்த நபருடன், அந்த பெண் குடியேறியுள்ளார். தனது தங்கையை காணவில்லை என அந்த பெண்ணின் சகோதரர் போலீசாரிடம் புகார் அளிக்க, ஜெ.என்.யு பல்கலைக்கழக அதிகாரிகளின் உதவியுடன், போலீசார் அந்த தம்பதியை கண்டுபிடித்தனர்.

பெண்ணை, அவர் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு, போலீசார் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். 3 நாட்கள் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீசார் வைத்ததாக தெரிகிறது. அந்த பெண்ணை தொடர்பு கொள்ள கூடாது என கூறி, போலீசார் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் தெரிவித்தார். 

தனது மனைவியை கண்டுபிடிக்க வேண்டி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை அந்த நபர் அளித்தார். இதை விசாரித்த நீதிபதிகள், போலீசாரின் செயல்களுக்கு கடும் கண்டனம் விடுத்தனர். 21 வயதான அந்த பெண்ணுக்கு சொந்தமாக முடிவெடுக்கும் உரிமை இருந்தும், ஏன் சகோதரரின் புகாரின் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி கேட்டனர். பின்னர், அந்த பெண்ணை வரவழைத்து நீதிபதிகள் தனிமையில் விசாரித்தனர். அப்போது அவர், தனது கணவருடன் செல்லவே விருப்பம் என கூறியுள்ளார். இதையடுத்து அவரது விருப்பப்படியே கணவருடன் செல்ல நீதிபதிகள் அனுமதியளித்தனர். மேலும், இந்த தம்பதிக்கு இனிமேலும் இதுபோன்ற பிரச்னை எழாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு  வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close