வெள்ள நிவாரணத்துக்காக பாட்டு பாடிய நீதிபதிகள்!! 

  சுஜாதா   | Last Modified : 28 Aug, 2018 10:43 am
supreme-court-judges-sing-for-kerala-flood-relief

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டு பாடி நிதி திரட்டினர். 

கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக அம்மாநிலமே பெரும் பாதிப்பு அடைந்திருக்கிறது.  கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்,  கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட பல நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர்.  கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்த நீதிபதிகள், மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை  பாடினர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close