வாட்ஸ் அப் மூலம் நீதிமன்ற விசாரணை- உச்சநீதிமன்றம் காட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Sep, 2018 10:17 pm
is-this-some-kind-of-a-joke-says-sc-on-trial-through-whatsapp

வாட்ஸ் அப் மூலம் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் நீதிமன்ற விசாரணை என்பது கேலிக் கூத்தா என கேள்வி எழுப்பியுள்ளது. 

ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் யோகேந்திர சாவோ அம்ற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோர் மீது 2016ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. இருவருக்கும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் நீதிமன்ற விசாரணை தவிர வேறு எதற்கும் ஜார்கண்ட் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடி புதிய குற்றச்சட்டை முன் வைத்துள்ளனர். ஜார்கண்ட் விசாரணை நீதிமன்ற நீதிபதி வாட்ஸ் அப் மூலம் இருவர் மீதும் குற்றச்சட்டை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம், வாட்ஸ் அப் மூலம் விசாரணையா... நீதித்துறையில் இதனை எப்படி அனுமதிக்க முடியும, இது என்ன நகைச்சுவையான விசயமா என கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதற்கான இணைப்பு முறையாக கிடைக்காததால், வாட்ஸ் அப் வீடியோ கால் பயன்படுத்தப்பட்டது" என்றார். இதை யோகேந்திராவின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close