வரதட்சணை கொடுமை புகார் அளித்தால் உடனடி கைது- உச்ச நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 11:47 am
immediate-arrests-of-dowry-harassment-sc

வரதட்சணை கொடுமை குறித்து புகார் கொடுத்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கலாம், அவர்களை உடனடியாக கைது செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

வரதட்சணை கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், வரதட்சணை கொடுமை குறித்து பெண்கள் யாரேனும் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக கைது செய்யலாம் என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். 

மேலும்,  புகார் அளிக்கும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கில், விசாரணைக்கு பின்னரே புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close