முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2018 01:26 pm
franco-mulakkal-sent-to-15-days-judicial-custody

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முன்னாள் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல்லை கேரள போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். அவரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியிருந்தனர். கடந்த சனிக்கிழமை, அவர் தரப்பில் போடப்பட்டிருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 2 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

2 நாட்கள் காவல் இன்று முடிந்த நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவரை பாலா சிறைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். கேரளா உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பாக ஜாமீன் மனு தொடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close