ஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  முத்துமாரி   | Last Modified : 26 Sep, 2018 11:50 am
sc-verdict-in-aadhaar-case

அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. 

முதலில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 'அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று தனிமனித சுதந்திரம். இதனை ஆதார் மீறுவதாக உள்ளது' என அந்த அமர்வு ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. 

இதையடுத்து, தனிநபரின் விபரங்களை பகிர்வது அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 

இந்த அமர்வு வழக்கை விசாரித்து முடித்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 26 அன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் பேரில் இன்று ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும், "மற்ற அடையாள அட்டைகளில் இருந்து ஆதார் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. தனிநபர் விபரங்கள் வெளியே கசிய கூடாது.  ஆதார் தகவல்களை பாதுகாப்பது என்பது அரசின் கடமை. அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்காக அவரது உரிமைகள் மறுக்கப்பட கூடாது. கல்வியில் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது" என நீதிபதி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close