சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 28 Sep, 2018 11:34 am
sc-verdict-on-sabarimala-case

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் இணைந்து ஒரு தீர்ப்பும், நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய மூவரும் தனித்தனியே தீர்ப்பு வழங்குகின்றனர். 

தீபக் மிஸ்ரா, கன்வில்கர் தீர்ப்பில், "ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாக நடத்தப்படக்கூடாது. பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.  கோவில்களில் அவர்கள் வழிபடுவதற்கு பாகுபாடு காட்டக்கூடாது. பெண்களின் உடல், உளவியல் காரணங்களை காரணம் காட்டி அவர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்களுக்குள் ஒரு பிரிவினை இருக்கக்கூடாது. எனவே சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை , நாரிமன், சந்திரசூட் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். நீதிபதி இந்து மல்கோத்ராவின் தீர்ப்பு மட்டும் மாற்றுக்கருத்தை உடையதாக உள்ளது.

இறுதியில், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது. இது வரலாற்றில் மிகமுக்கியமான தீர்ப்பாக அமைந்துள்ளது. பெண்கள் மத்தியில் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close