சபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 12:51 pm
sabarimala-verdict-justice-indu-malhotra-dissents-says-courts-must-respect-religious-practices

சபரிமலை வழக்கில் 4 நீதிபதிகள் ஒருமித்த கருத்தை கூறியிருக்கையில், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். 

10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில்  பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, நீதிமன்றம் இன்று 'அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் இணைந்து ஒரு தீர்ப்பும், நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய மூவரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். 

கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோர் தீர்ப்பை நீதிபதிகள்  நாரிமன், சந்திரசூட் ஏற்றனர். நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என தீர்பளித்தார். 

அவர், "கோவிலில் வழிபட, பெண்கள் இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. ஆனால் சபரிமலை கோவில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது. குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது. அவ்வாறு அனுமதித்தால் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இதில் பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும்." என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close