சமூக செயற்பாட்டாளர்கள் கைதில் குறுக்கிட முடியாது: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 06:24 pm
supreme-court-declines-sit-probe-in-activists-arrest

5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள வழக்கில், சிறப்பு விசாரணை குழு தேவையில்லை என முடிவெடுத்து உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 

மஹாராஷ்டிரா பீமா கோரேகான் கலவர வழக்கில், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது புனே போலீஸ். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களில் 5 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர்களை மிரட்டும் நடவடிக்கையாக புனே போலீஸ் இதை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் மனு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 2-1 என்ற பெரும்பான்மையுடன், சிறப்பு விசாரணை குழு தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது. சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னன் கொன்ஸால்வெஸ், கௌதம் நவ்லகா, அருண் பெரெய்ரா ஆகிய 5 செயற்பாட்டாளர்கள் இன்னும் 4  வாரங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுவார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close