உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் ஒடிஸா மாநில வழக்கறிஞர்கள்

  Dr.தர்மசேனன்   | Last Modified : 29 Sep, 2018 04:27 pm
orissa-advocates-defy-supreme-court-order

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தங்களது வேலைநிறுத்தத்தை தொடருவது என ஒடிஸா மாநில வழக்கறிஞர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

ஒடிஸாவில் வழக்கறிஞர் ஒருவரை 4 காவலர்கள் தாக்கியதாகக் கூறி கடந்த 28-ஆம் தேதியில் இருந்து, அந்த மாநில வழக்கறிஞர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, வழக்குரைஞர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக, அபிஜித் ஐயர் மித்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை  விசாரணை மேற்கொண்ட , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தத்தை வழக்குரைஞர்கள் கைவிட வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ஒடிஸா மாநில வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பினர், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து இன்று ஆலோசனை நடத்தினர். அதில் தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை, வரும் புதன்கிழமை வரையில் தொடருவது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளர் சத்யபத்ரா மொஹந்தி போராட்டத்தை தொடருவதற்கான அடிப்படைக் காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close