'ஆப்பிள்' நிர்வாகி சம்பவம் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு 

  Padmapriya   | Last Modified : 01 Oct, 2018 07:11 pm
apple-executive-killing-fir-against-arvind-kejriwal-for-promoting-enmity-with-hindu-tweet

உத்தரப்பிரதேசத்தில் 'அப்பிள்' நிறுவன நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சாதி மத அடிப்பைடயில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை: உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிர்வாகி ஒருவர், 2 போலீஸ் கான்ஸ்டபிள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் நிறுவன நிர்வாகியாக பணிபுரிந்தவர் விவேக் திவாரி. இவர் சமீபத்தில் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின், லக்னோவிலிருந்து 2ம் தேதி நள்ளிரவு கோமதி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு பெண் அதிகாரி சனா கான் என்பவருடன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மீரட் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சௌத்ரி, சந்தீப் என்ற 2 கான்ஸ்டபிள்கள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காரில் வந்த விவேக் திவாரியையும் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்கு அவர் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. 

இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் கான்ஸ்டபிள் பிரஷாந்த் சௌத்ரி கூறுகையில், ''நாங்கள் காரை நிறுத்தச் சொல்லி விவேக்கிடம் செய்கை காண்பித்தோம். ஆனால், அவர் ரிவர்ஸ் எடுத்து எங்கள் பைக் மீது மோதினார். தொடர்ந்து மூன்றாவது முறை அவர் மோதியபோது தான் தற்காப்பிற்காக சுட்டேன்'' என்றார்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் கான்ஸ்டபிள் பிரஷாந்த் சௌத்ரிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி கைதானி தெரிவித்துள்ளார். விவேக் திவாரி காரை ரிவர்ஸ் எடுத்த போது, கார் மோதி அவர்களது பாதத்தில் காயம் ஏற்பட்டதாக கூறியிருக்கின்றனர். அவர் காரை ரிவர்ஸ் எடுத்த போது சுட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும், திட்டமிடப்பட்டு நடந்த சம்பவம் அல்ல. இது என்கவுண்ட்டரும் அல்ல என்று செய்தியாளர்களிடம் கலாநிதி கைதானி தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால் மீது வழக்கு என்? 

இந்தச் சம்பவம் எதிர்க்கட்சிகளால் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில். இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ''இது என்கவுண்ட்டர் அல்ல. தேவைப்பட்டால், சிபிஐ விசாரணை கோரப்படும்'' என்றார்.

இதனிடையே இந்த உத்தரப்பிரதேச காவல்துதுறை அதிகாரிகளை விமர்சித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,''விவேக் திவாரி ஒரு இந்துவாக இருந்தும் கொலை செய்யப்பட்டுள்ளாரே?'' என ட்வீட் செய்துள்ளார். 

இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சாதி மத அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close