சபரிமலை விவாகரத்தில் மேல்முறையீடு இல்லை: தேவசம் போர்டு

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2018 04:16 pm
there-is-no-appeal-against-sc-verdict-says-sabarimala-devasam-board

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு எதுவும் செய்யப்படாது என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடுத்த வழக்கில், அனைத்து வயதான பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த போதும், கேரள பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் நிலையில் கேரள அரசு உள்ளது. இந்த விவகாரத்தில் மறு சீராய்வு மனு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்று கேரளாவின் பண்டலம் என்ற பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படமாட்டாது என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று தேவசம் போர்டு நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்று, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என தேவசம் போர்டு கூறியிருந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close