பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 03:23 am
kerala-govt-did-t-consider-devotees-sentiments-on-sabarimala-case

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கேரள அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த விதத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. 

சபரிமலை தேவஸ்தானத்திற்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மேல், பல்வேறு இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை தேவஸ்தானமும் தெரிவித்துள்ளது. அதேபோல, உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், அடுத்த மாதம் 16ம் தேதி முதல், தேவஸ்தானத்திற்குள் பெண்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அதேநேரம், கோவிலின் சம்பிரதாயம், பாரம்பரியம், பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கேரளா அரசு, பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளதாகவும், விமர்சித்துள்ளது. அனைத்து ஆன்மீக தலைவர்களும், இந்து சமூக தலைவர்களும், பக்தர்களும் ஒன்றாக சேர்ந்து, இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் வழி உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close