பிப்ரவரி 18ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 03:24 am
kulbhushan-jadhav-case-to-be-heard-by-icj-on-feb-18th

இந்திய உளவாளி என குற்றம் சாட்டி, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கை 2019 பிப்ரவரி 18ம் தேதியன்று விசாரிக்கவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2016ம் ஆண்டு, தங்கள் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர் உளவாளி இல்லையெனவும், அவரை ஈரானில் இருந்து பாகிஸ்தான் அரசு கடத்தியுள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டியது. அவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. குல்பூஷண் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது 

47 வயதான குல்பூஷண் ஜாதாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த வழக்கை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி விசாரிக்கவுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணை, பிப்ரவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close