ரோஹிங்யா முஸ்லீம்கள் விவகாரம் : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 01:39 pm
supreme-court-refuses-to-stop-deportation-of-7-rohingya-to-myanmar-today

இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவிக் குடியேறி வசித்து வந்த 7 ரோஹிங்யா முஸ்லீம்களை நாடு கடத்துவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும், அதில், தலையிட்டு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பான மனுமீது இன்று நடைபெற்ற விசாரணையில் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவுக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 7 ரோஹிங்யா முஸ்லிம்களை மத்திய அரசு நாடு கடத்த உள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாக அசாம் மாநிலம் சில்சாரில் வசித்து வந்த அந்த ஏழு பேரும் அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தலின் அடுத்த நடவடிக்கையாகஅங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மியான்மர் எல்லை வழியாக அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என அசாம் மாநில கா வல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவர்கள் 7 பேரையும் நாடு கடத்தத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும், எனவே, அதில் தலையிட நீதிமன்றத்துக்கு முகாந்திரம் இல்லை என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ஏழு ரோஹிங்யா முஸ்லிம்களையும் நாடு கடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, மியான்மர் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்து சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் வடக்கு மாகாணமான ராக்கைனில் உள்ள ஹிந்துக்கள் மீது கடந்த 2011-112 கால கட்டங்களில் அங்கு வசித்து வந்த ரோஹிங்யா முஸ்லீம்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாகக் குடியேறத் தொடங்கினர்.

அதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லீம்களால் உள்நாட்டில் அமைதி சீர்குலைகிறது என நாடெங்கிலுமிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பாரதப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார்.

அதன்தொடர்ச்சியாக  இந்தியாவில் வசித்து வரும் 54 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்களில் 14 ஆயிரம் பேர் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டு வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும், ஏனைய 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர் என்றும் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை பயோமெட்ரிக் முறை மூலமாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close