டெல்லிக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய வழக்கு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2018 09:50 am
supreme-court-dismisses-petition-seeking-full-statehood-for-delhi

கடும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளடெல்லி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து  வழங்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் மக்கள் தொகை அதிகரிப்பினால் போக்குவரத்து  நெரிசல், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடவேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் தெபசிஸ் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்கு பிறகு, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க இயலாது என நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

முன்னதாக கடந்த ஜூலை 4ம் தேதி இதே தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close