ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு - லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்

  பாரதி கவி   | Last Modified : 06 Oct, 2018 12:35 pm
irctc-scam-lalu-s-wife-and-son-get-bail

ஐஆர்சிடிசி ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவினுடைய மனைவி ராப்ரி தேவி, இவர்களது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லாலு பிரசாத் யாதவ், கடந்த 2005ஆம் ஆண்டில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில், ஒடிஸா மாநிலத்தின் புரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய இடங்களில், ரயில்வேத்துறைக்கு சொந்தமான ஐஆர்சிடிசி ஹோட்டல்களை பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தம் சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அதற்கு பிரதிபலனாக, சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்களான விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமாக, பாட்னா அருகே உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பினாமி பரிவர்த்தணை மூலமாக பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லாலு பிரசாத் ஏற்கனவே மற்றொரு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஐஆர்சிடிசி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close