சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 11:48 am
sc-declines-early-hearing-of-review-petitions-reg-sabarimala-verdict

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இளம் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 

அதன்படி, கோவிலுக்குள்ளே அனுமதிப்பதில் பெண்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறி கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சம்மேளனம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று வழக்கி தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும் அளவுக்கு அவ்வளவு முக்கியமான வழக்கு இதுவல்ல என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close