வங்கிகள் வட்டியை குறைக்காதது ஏன்?:உச்ச நீதிமன்றம் கேள்வி

  பாரதி கவி   | Last Modified : 09 Oct, 2018 01:46 pm
sc-questions-rbi-about-bank-not-reducing-interest-rates

’ரெப்போ ரேட்’ விகிதத்துக்கு தகுந்தபடி, வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது ஏன்? என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி அளவீடு ஆகும்.

மணி லைஃப் பவுண்டேசன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளது. அதில், ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை குறைக்கும் சமயங்களில், வங்கிகள் அதற்கு ஏற்ப தங்கள் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டியை குறைப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெப்போ ரேட் அடிப்படையில் குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வட்டி குறைப்பின் ஒரு சதவீத பலன்களை வழங்காத நிலையை கணக்கிட்டால் கூட, வாடிக்கையாளர் அல்லது கடன்தாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டபோதும் முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டி குறைப்பின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உள்பட மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close