துர்கா பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

  பாரதி கவி   | Last Modified : 11 Oct, 2018 12:33 pm
sc-agreed-to-hear-plea-againt-wb-govt-s-fund-to-durga-pooja

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை நடத்தும் விழா குழுவினருக்கு அரசு சார்பில் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது நாளை விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், துர்கா பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கப்படுவதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று பரிசீலனக்கு வந்தது.

வழக்கை தொடுத்த வழக்கறிஞர் சௌரவ் தத்தா வாதாடும்போது, துர்கா பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது ஆகும். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close