ஐயப்பன் கோயில் தேவசம் போர்டை கலைக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு: கேரள அரசுக்கு நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 10:29 am
swamy-request-to-abolish-devasam-board-sc-notice-to-kerala-govt

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் டி.ஜி.மோகன் தாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கேரள பா.ஜ.க.வினர் இத்தீர்ப்புக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், பெண்களை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கும் தீர்ப்புக்கு பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து 6 வாரங்களுக்கு பின் விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மனுதாரரின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close