நாட்டில் எல்லோரையும் சைவமாக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம்

  shriram   | Last Modified : 13 Oct, 2018 04:43 am
can-t-order-the-country-to-become-vegetarians-sc

இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய இரண்டு தன்னார்வல அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டில் எல்லோரையும் சைவமாக மாற்ற முடியாது என கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்ய வேண்டுமென கோரி, இரண்டு தன்னார்வல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தொடுத்தன. ஹெல்தி வெல்தி எதிக்கல் ட்ரஸ்ட் மற்றும் கைடு இந்தியா ஆகிய இரண்டு அமைப்புகள் இந்த மனுவை தொடுத்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மதன் பி லோகூர், "நாட்டில் உள்ள அனைவரும் சைவமாக மாற வேண்டும் என சொல்கிறீர்களா? எல்லோரையும் சைவமாக மாற நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது" என கூறினார். 

இந்த மனுவின் மீதான விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஒத்திவைத்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close