துப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி எம்.பி மகன் போலீசில் சரண்!

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 05:50 am
gun-toting-mp-s-son-surrenders

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தனது துப்பக்கியை காட்டி அங்கிருந்தவர்ளை மிரட்டிய முன்னாள் எம்.பி மகன், போலீசில் சரணடைந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி ராகேஷ் பாண்டேயின் மகன் ஆசிஷ் பாண்டே. சமீபத்தில், டெல்லியில் உள்ள இரு நட்சத்திர ஓட்டலுக்கு தனது பெண் நண்பர்களுடன் சென்றிருந்த ஆசிஷ், ஓட்டலில் சந்தித்த ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தனது துப்பக்கியை எடுத்து, அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை மிரட்டினார். அப்போது ஓட்டல் நிர்வாகிகள் வந்து, அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தை, அவரது காரில் இருந்த ஒரு பெண் நண்பர் வீடியோ எடுத்தார். அது சமீபத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆசிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close