ஊழல் புகார்  - ரயில்வே தீர்ப்பாய நீதிபதியை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 10:25 am
sc-cji-nods-to-suspend-tribunal-justice-due-to-scam

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய ரயில்வே வாரிய தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆர்.கே.மிட்டலை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ரயில்வே வாரிய தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆர்.கே.மிட்டல். ரயில்வே விபத்துகளில் இழப்பீடு வழக்கு தொடரும் வழக்குதாரர்களுடன், வழக்கறிஞர்கள் சமரசம் பேசி அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும், அந்த வகையில் ரூ.50 கோடி வரை ஊழல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என ரயில்வே தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி கே.கண்ணன், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல், பதவியில் இருக்கும் தீர்ப்பாய நீதிபதியை இடைநீக்கம் செய்ய முடியாது என்ற சட்ட ஆலோசனையை பரிசீலனை செய்த ரயில்வே வாரியம், அதுதொடர்பான கோப்புகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. அந்த கோப்புகள் பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த மாதத்தில் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ரஞ்சன் கோகோய், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி ஆர்.கே.மிட்டலை இடைநீக்கம் செய்ய அவர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக, ஊழல் புகார் எழுந்ததால், ராஞ்சியில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு ஆர்.கே.மிட்டல் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close