ஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்க வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 08:52 am
supreme-court-fines-lawyer-for-filing-pil-to-lower-marriageable-age-of-men

ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்கக் கோரிய பொது நல வழக்கை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு  தள்ளுபடி செய்தது, மேலும் மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. 

ராணுவத்தில் சேரவும், வாக்களிக்கவும் 18 வயது நிரம்பியிருந்தால் போதும் எனும்போது, திருமணம் செய்யவும் ஆண்களுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால் போதும் என உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், 18 வயது நிரம்பிய ஒருவர் திருமணம் செய்யவும், அதனை பதிவு செய்யவும் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை விசாரிக்க தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. மேலும் வழக்கறிஞர் அசோக் பாண்டேக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close