சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் - உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனை

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 10:50 am
sc-to-consider-the-review-petitions-on-sabarimalai

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. 

முன்னதாக, அனைத்து வயதுப் பெண்களையும் ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக நாடெங்கிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, சபரிமலை சன்னிதானம் அருகே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே சமயம், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 19 தரப்பினர் சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை தசரா விடுமுறை முடிந்த பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியிருந்தார். அதன்படி மறுஆய்வு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு வருகின்றன.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close