'29ம் தேதி வரை அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க முடியாது'

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 07:46 pm
rakesh-asthana-gets-relief-till-oct-29th

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வரும் 29ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சிபிஐ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி பற்றி சிபிஐ நடத்தி வந்த விசாரணையில், லஞ்சம் வாங்கி அவருக்கு உதவியதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்திர குமார் உட்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்கனவே சர்ச்சை இருந்துவந்த நிலையில், இந்த வழக்கு தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். 

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி, தேவேந்திர குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொகுத்திருந்தார். இதுகுறித்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாசிரி, வழக்கை 29ம் தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். அதுவரை, தற்போது இருக்கும் அதே நிலையை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனால், 29ம் தேதி வரை இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் சிபிஐ எடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close