உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படுத்துவது அறியாமையா... அகங்காரமா..? (பகுதி-1)

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Oct, 2018 05:54 pm
supreme-court-s-judgement-about-deepavali-crackers-illegal-affairs-sabarimala

இந்தியாவின் உயர்பீடமாக சுப்ரீம் கோர்ட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டு உள்ளோம். ஆனால் சமீபகாலத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட தீர்ப்புகள் இந்தியாவின் வாழ்வியல் நடைமுறை எதைப்பற்றியும் தெரியாமல்,ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் போல உள்ளது. கோடிக் கணக்கான மக்களை பாதிக்கும் விஷயங்களை அறைக்குள் அமர்ந்து கொண்டு தீர்ப்பு அளித்து வருகிறது. கள்ளக்காதல் சரியானது,சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம், தீபாவளிக்கு இரவு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் ஆகிய 3 தீர்ப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் அறியாமையின் உச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

பட்டாசு பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அபத்தத்தின் உச்சமமாகதான் உள்ளது. இயந்திரமயம் செய்யமுடியாத ஒரே தொழில் பட்டாசு உற்பத்தி. லட்சக்கணக்கானவர்களுக்கு சோறுபோடுகிறது. தீபாவளி பண்டிகையை இலக்காக வைத்து ஆண்டு முழுவதும் தொழிலாளர்கள் வீ்ட்டில் அடுப்பு எரிகிறது. இதை முடக்கிவிட்டால், ஒரு சில ஆண்டுகள் கழித்து சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்கலாம். அதற்கு ஏற்ப நிபந்தனை உருவாக்கி கொள்ளலாம்.

இந்த சதிதான் பட்டாசுக்கு எதிராக வழக்கு தொடருதற்கு காரணம். கடந்த 2014ம் ஆண்டில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி டில்லியில் நடந்தது. அதற்கு வெளிநாட்டினர் வருவார்கள், அவர்களை பாதுகாக்க சுற்றுச்சூழல் மாசு தடுப்பு பற்றி விவாதம் எழுந்தது. அதற்கு ஏற்ப 2015ம் ஆண்டில் டெல்லியை சுற்றி உள்ள மாநில எல்லைகளில் கோதுமை,நெல் அறுவடை. முடிந்து நிலத்தை எரியூட்டிய போது எழுந்த புகை. டெல்லியில் வாகனமே ஒட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என அதே காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை வந்ததால்,வழக்கு பாய்ந்தது. அதற்கு ஏற்ப தீர்ப்பு வந்தால், கிறிஸ்தவ மிஷனரிகள் ‘மாசில்லாத தீபாவளி’ பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று விதவிதமாக நிகழ்ச்சிகள் நடத்தி 6 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் பட்டாசு தொழிலை முடிக்கினர். இதே காலகட்டத்தில் சீனாவில் இருந்து பட்டாசு வந்து கொண்டுதான் இருந்தது.  ஆன்லைனில் விற்பனையும் நடந்தது. அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மீண்டும் கடந்த ஆண்டு அக். 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை தடைவிதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில், நேற்று இந்த வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் பட்டாசு அதிகம் பயன்படுத்தும் தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளது. இதில் புத்தாண்டு, கிறிஸ்மஸ் இரண்டும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது, அவர்கள் இரவு நேரத்தில் தான் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்காரணமாக இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது நியாயம். ஆனால் தீபாவளி எப்போதும் அதிகாலை கொண்டாடுவது,

காலை வேளைகளில் வழிபாட்டை முடித்த பின்னர் தான் வெடிவெடிப்பார்கள். மாலையில் மத்தாப்புதான் வெடிப்பா்ரகள். ஆனால் தீபாவளி அன்று இரவு 8.00–10 மணி வரைதான் வெடி வெடிக்க வேண்டும் என்று கூறுவது பண்டிகையை பற்றி தெரியாதவர்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் என்பது வெளிப்படையாக காட்டியது. இவர்கள் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள், இதை அமல்படுத்த வீதிவீதியாக காவல்துறை சுற்றப்போகிறது. கண்டவனையும் பிடித்து ரூ.100 கொடுத்தால் தான் விடுவோம் என்று வசூல் வேட்டை ஆடப் போகிறார்கள். இதற்கு மட்டும் தான் இந்த தீர்ப்பு பலன் தருகிறது. இப்படி மடத்தனமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்குறது என்றால், இரண்டு தான் காரணங்கள், ஒன்று அவர்கள் அறியாமை, அடுத்தது எப்படி இருந்தாலும் நாம் போன ஆட்சியில் தானே நியமிக்கப்பட்டோம்,இந்த ஆட்சிக்கு தானே கெட்டபெயர் நமக்கு என்ன என்பதுதான். ஆனால் இப்படியே .தொடர்ந்து தீர்ப்புகள் வெளியானால் அது நாட்டிற்கு நல்லது அல்ல.

- பாரதி பித்தன்

தொடரும்...

*(இந்த கட்டுரையில் உள்ளவை, கட்டுரையாளரின் கருத்து. நியூஸ்டிஎம்-இன் கருத்து அல்ல)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close