உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படுத்துவது அறியாமையா... அகங்காரமா..? (பகுதி-2)

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Oct, 2018 05:53 pm
supreme-court-s-judgement-about-deepavali-crackers-illegal-affairs-sabarimala

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படுத்துவது அறியாமையா... அகங்காரமா..?  தொடர்ச்சி...

அடுத்து, கள்ளக்காதல் நல்லது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இந்திய வாழ்வியலில் அச்சாணி. குடும்பம், முன்பு கூட்டுக்குடும்பமாக இருந்தது, தற்போது தனிக்குடும்பமாக மாறிவிட்டது. இதனால் பெற்றதை விட இழந்தது அதிகம். தனிக்குடும்பத்திலும் கணவன், மனைவி வேலைக்கு போகின்றவற்றில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே வெகு சொற்ப நேரம் என்றாகிவிட்டது. பிரச்னைகளை .பேசித்தீர்க்க கூட ஆள் இல்லாத நிலைதான் பல இடங்களில் உள்ளது. இந்த சூழ்நிலையில் கள்ளக்காதல் தோன்றுவதற்கு பலவிதமா சூழ்நிலை காரணங்கள் உள்ளன. செக்ஸ் அடிப்படையில் கள்ளக்காதல் தோன்றுவது வெகு சொற்பம் தான். அதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் மகிழ்ச்சியற்ற குடும்பத்தில் தான் கள்ளக்காதல் உருவாகும், பிடிக்காத உறவுகளை இணைந்து வாழ வற்புறுத்துவது பாவம்,அதனால் கள்ளக்காதல் நல்லது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தாய்மை இயற்கை வழங்கிய வரம்; அது பெண்ணிக்கு மட்டுமே இயலும் என்றால் கலப்பு இல்லாத சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பதற்காத்தான் பெண்களுக்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். குழந்தை பிறந்து விட்டால் அவர்களை பாதுகாப்பதற்காக பல பெண்கள் இம்சைக் கணவனை பொறுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.  அப்படி சூழ்நிலையில் ஆறுதலுக்காக தோன்றும் உறவுகள் கடைசி வரை கை கொடுக்காது. பெண்ணை ஓடிவரச் சொல்லும் கள்ளக்காதலன் அவள் குழந்தைகளை ஏற்பது கிடையாது. மேலும் மனைவி ஓடிவிட்ட நிலையில்,தந்தைக்கும் பிள்ளை மீது பாசம் குறைந்துவிடும். இது போன்ற காரணங்கள் தான் அபிராமி போன்றவர்களுக்கு குழந்தைகளை கொலை செய்யும் மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. பல தாரமணங்களை ஆதரிக்கும் மதங்கள், ஜாதிகள் அதற்கு ஏற்ப பல விதிகளை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக முதல்கணவனுக்கு பிறக்கும் பிள்ளைகளை அரசே வளர்க்கிறது.

நம் நாட்டில் இது போன்ற பிள்ளைகள் பெண்ணின் பெற்றோர் வீட்டில் தான் வளர்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பலதார மணம் எளிதாக போகிறது.கள்ளக்காதல் ஜோடிக்கு இது போன்ற வாய்ப்பு கிடையாது. இது போன்ற சூழ்நிலையில் தான் குடும்பத்தின் அவ2சியத்தை சமுதாயம் கட்டாயப்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இதற்கு ஆப்பு வைத்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு இடத்தில் குடும்பத்தினர் கதற கதற கள்ளக்காதலன் காதலியை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவமும் நடந்துள்ளது.

இறுதியாக, சபரிமலை தீர்ப்பு... சபரிமலை இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்று. இங்கு பல விதமான சம்பரதாயங்கள் ஐயப்பன் ஒப்புதலுடன் கடைபிடிக்கப்படுகிறது. இதை நம்புகிறவர்கள் ஆண்டுதோறும் ஒரு மண்டலம் விரதம் இருக்கிறார்கள். பெரும்பாலும், மழை, பனி காலமான கார்த்திகையில் அதிகாலையில் எழுது பச்சை தண்ணீரில் குளித்துவிட்டு, அன்றாட கடமைகளை செய்கிறார்கள். வீட்டில் அசைவ சமையல், உடலுறவு ஆகியற்றிக்கு தடை. .கட்டாந்தரையே படுக்கை, கையே தலையணையாக வாழ்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் எந்த வேதத்திலும் தேடினாலும் கிடைக்காது.குருசாமி சொல்வது தான் வேதம், அவருக்கு அவருடைய குருசாமி. இப்படி தலைமுறை தலைமுறையாக எழுதாத வேதம் தான் சபரிமலையாத்திரையை வழிநடத்துகிறது. அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக(இதற்கான விளக்கம் பலர் பலவிதமாக சொல்கிறார்கள்;

இது பற்றி பல கட்டுரைகளில் வண்டி வண்டியாக எழுதப்பட்டு விட்டது) மாதவிடாய் காலத்தில் பெண்கள் வரக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். கட்டாயம் ஐயப்பனை தரிக்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு  அதை கடைபிடிப்பதில் சிக்கல் எழவில்லை. அவன் வீட்டு பெண்கள் யாரும் நாங்களும் வருகிறோம் என்று துடிதுடித்து நிற்கவில்லை ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லாத, அல்லது நாட்டின் அமைதியை குலைக்க விரும்புகிறவன் வழக்கு தொடர்கிறான். அதற்கு உச்ச நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கிவிட்டது. விவாகரத்து சட்ட ரீதியாக ஆனபின்னர் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் அதிகப்படியாக விவாகரத்து வழக்கு இருப்பது போல, தீர்ப்பு வெளியானதும்,நுாற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலையை நோக்கி படைஎடுக்கவில்லை. போனவர்களுக்கும் ஐயப்பன் மீது பக்தியோ, பற்றோ இல்லை. இவர்களுக்கு தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உதவி இருக்கிறது.

இந்த வழக்கு கோர்ட்டில் வந்த உடன் நீதிமன்றம் ஆன்மீக நம்பிக்கை அடிப்படையான இந்த வழக்கு இதில் நீதிமன்றம் தலையிடாது என்று வழக்கை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். அல்லது மடாதிபதிகளிடம் கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து தாங்களாகவே ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு தீர்ப்பு எழுதுவது என்பது அதிகாரத்தின் உச்சம். இதை அமல்படுத்த நுாற்றுக்கணக்கான போலீசார் அவர்களுக்கு லட்சணக்கணக்கில் செலவு, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம். விளைவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை. 4 பேர் எழுதிய தீர்ப்பால் நாடே கொந்தளிக்கிறது. இதன் பின் விளைவுகளுக்கு  நீதிமன்றம் பொறுப்பு ஏற்காது. இதற்காகவே உச்ச நீதிமன்றத்தை நாட்டின் உயர்ந்தபட்ச அமைப்பாக உருவாக்கி உள்ளோம்.

- பாரதி பித்தன்

*(இந்த கட்டுரையில் உள்ளவை, கட்டுரையாளரின் கருத்து. நியூஸ்டிஎம்-இன் கருத்து அல்ல)
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close