சிபிஐ அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகாரில் எஸ்.ஐ.டி. விசாரணை கோரி வழக்கு

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 12:29 pm
sc-admitts-plea-seeking-sit-probe-against-cbi-officials

சிபிஐ அமைப்பில், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று தாக்கல் செய்துள்ள அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், புகார் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்தால், அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர். முன்னதாக, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆலோக் வர்மா, அந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close