ரஃபேல் கொள்கை ஆவணம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 03:28 pm
centre-submitts-decision-making-details-about-rafale-to-sc

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்துக்கு, முன்னோட்டமாக இருந்த கொள்கை ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. முன்னதாக, மத்திய அரசிடம் இதுதொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

 

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மனு கடந்த 10ம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும், கொள்கை ஆவணத்தை மத்திய தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விவரங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் கேட்பதால் இதனை உத்தரவாகக் கருத வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. விமானத்தின் விலை, தொழில்நுட்ப விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

 

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான கொள்கை ஆவணத்தை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close