உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 4 பெயர்களை பரிந்துரைக்க கொலீஜியம் முடிவு?

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 12:51 am
kolegium-decides-to-nominate-supreme-court-judges

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க கொலீஜியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம் என்ற நிலையில் தற்போது, தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் 24 நீதிபதிகளே உள்ளனர். இதில், நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 4 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா (மத்தியப் பிரதேசம்), அஜய் ரஸ்தோகி (திரிபுரா) எம்.ஆர்.ஷா (பாட்னா) ஆர் சுபாஷ் ரெட்டி (குஜராத்)  ஆகியோரது பெயரை பரிந்துரைக்கவுள்ளதாக தெரிகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close