ரஃபேல் குறித்த பொதுவான தகவல்களை வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 12:02 pm
sc-asks-centre-to-disclose-rafale-details-in-public-domain

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சட்டப்பூர்வமாக வெளியிடக் கூடிய தகவல்களை மட்டும், பொதுநல வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்களுக்கு தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். அதில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி, ரஃபேல் தொடர்பான கொள்கை முடிவுகளை சீலிடப்பட்ட உறையில் வைத்து மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டிய விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டியதில்லை என்றும், சட்டப்பூர்வமாக வெளியிடக் கூடிய பொதுவான தகவல்களை மட்டும் மனுதாரர்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, ரஃபேல் விமானங்களின் விலை குறித்த தகவல்களை, சீலிடப்பட்ட உறையில் வைத்து 10 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், அலுவலக ரகசியச் சட்டத்தின் அடிப்படையில் அதுபோன்ற தகவல்களை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, ரஃபேல் விலை விவரங்களை தெரிவிக்க இயலாது என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

news4

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close