ஹஷிம்புரா படுகொலை: 16 உ.பி ஆயுத படையினருக்கு ஆயுள் தண்டனை !

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 05:13 pm
hashimpura-massacre-16-fmr-pac-troopers-get-life

உத்தர பிரதேசத்தின் ஹஷிம்புராவில், 42 இஸ்லாமிய இளைஞர்களை, மாநில ஆயுத படையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

1987ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் நடைபெற்ற கலவரத்தின் போது, அம்மாநில ஆயுதப் படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஹஷிம்புரா பகுதியில், கலவரத்தை அடக்கும் போர்வையில், பல இஸ்லாமிய இளைஞர்களை ஆயுத காவல் படையினர் கைது செய்து கொண்டு சென்றனர். சில தினங்களுக்கு பின், அங்குள்ள கால்வாய்களில், 42 இளைஞர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்த இளைஞர்களை ஊருக்கு ஒதுக்குபுறமாக கொண்டு சென்ற ஆயுத படையினர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிய வந்தது. சம்பவத்தின் போது, அங்கிருந்து தப்பிய ஒரு இஸ்லாமியர் இளைஞரின் வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆதாரங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது, வழக்கை சிஐடி-க்கு மாற்றியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, 1996ம் ஆண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறந்தவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. 2015ம் ஆண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததாக குற்றம்சாட்டி, அவர்களை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது. 

வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் குற்றச்சாட்டப்பட்ட 19 பேரில், மூவர் இறந்து விட்டனர். பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது டெல்லி உயர் நீதிமன்றம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close