ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது- நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:05 am
chidamabaram-got-bail-extension-upto-nov-26

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை, நவம்பர் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

முன்னதாக, இந்த வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, அவர் விசாராணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், ஆகவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டுக்கு உடைந்தையாக இருந்து, லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கு பலமுறை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக கடந்த மாதம் 25ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close